கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்!! வாடிக்கையாளர்களுக்கு 20%சதவீதம் அதிரடி சலுகை!!
பெண்களுக்கு அழகு சேர்ப்பது என்பதே காதணி தான். இந்த காதணிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, டாட்டா குழுமத்தை சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நக பிராண்டாக முன்னணி வகிக்கும் தனிஷ்க் ஜுவல்லரி தனது வாடிக்கையாளர்களுக்கு பெஸ்டிவல் ஆஃப் இயர் ரிங்ஸ் எனும் காதணிகளுக்கான கண்காட்சி திருவிழாவை துவக்கியுள்ளது.
கோவை ஒப்பணக்கார வீதி ,வெள்ளக்கிணறு பிரிவு ,பொள்ளாச்சி உள்ளிட்ட மூன்று தனிஷ்க் ஜுவல்லரியின் விற்பனை நிலையங்களில் இந்த காதணி கண்காட்சி நடைபெற்று வருகிறது.
ஜூன் 21 முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு நடைபெறும். இந்த காதணிகள் கண்காட்சியில் தனிஷ்க் பிரத்தியேகமான வடிவமைப்புகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையிலான காதணிகள் இடம்பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளாக தங்க நகைகளின் செய்கூலி மற்றும் வைர நகைகளின் மதிப்பில் 20 சதவீதம் வரையிலான தள்ளுபடி சலுகை கூடுதலாக அளித்துள்ளது.
மேலும் தனிஷ்க் கோல்டு எக்சேஞ்ச் திட்டத்தின் மூலம் 22 கேரட் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள இந்தியாவில் எந்த நகைக்கடையில் வாங்கிய பழைய தங்கத்திற்கு 100% பரிமாற்ற மதிப்பை பெற வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
மேலும் இந்த காதணி திருவிழாவில் நம்முடைய பழமையான பாரம்பரியம் நவீனத்துதுவத்தையும், அழகியலுடன் கலந்து மிக நேர்த்தியாக காதணிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மெல்லிய நுட்பமான காதணிகள் முதல் விலை உயர்ந்த கற்கள் பதித்த காதணிகள் வரை தங்கம், வைரங்கள் மற்றும் ரத்தின கற்களால் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காதணி பிரியர்கள் மற்றும் நகை ஆர்வலர்கள் தங்களுக்கு விருப்பமான காதணிகளை ஒரே தளத்தில் வாங்க தனிஷ்க் ஜுவல்லரி வாய்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-சீனி, போத்தனூர்.
Comments