பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதனை படைத்த நிர்மலா மாதா பள்ளி!!!

கோயமுத்தூர் மாவட்டம் நிர்மலா மாதா பதின்ம மேல்நிலைப்பள்ளி: தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வு இரண்டு நாட்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. 

நிலையில் அதிகமான விழுக்காடுகளை மேற்கு மாவட்டங்கள் பெற்று தந்துள்ளது. குறிப்பிடத்தக்கது திருப்பூர், கோவை,தேனி போன்ற மாவட்டங்கள் அடுத்தடுத்து முன்னிலை வகித்துள்ளன. சிறப்பாக கோவை குனியமுத்தூர் பகுதியில் அமைந்திருக்கும் நிர்மலா மாதா பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவி நூர் ஜஃபீனா 597 முதல் மதிப்பெண் எடுத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார் இரண்டாம் மதிப்பெண் முகமது இர்ஃபான் 590 மதிப்பெண் எடுத்துள்ளார். 

மொத்தம் 36 மாணவ மாணவிகள் 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். 84 மாணவ மாணவியர்கள் டிஸ்டிங்க்ஷன் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப் பள்ளியிலேயே பயின்று பிளஸ் டூ மதிப்பெண்கள் சிறப்பாக எடுக்க காரணம் மாணவ மாணவிகளின் கடின உழைப்பும் ஆசிரியர்களின் சரியான வழிநடத்துதலும் கல்வி முதல்வரின் சரியான நெறிமுறைகளை பின்பற்றியதாலும்  இந்த மதிப்பெண்கள்  கோவை மாவட்டத்திற்கு பெருமையை சேர்த்துள்ளதாக மாணவ மாணவியர்கள் கூறினார் இங்கு படித்த மாணவ மாணவியர்களும் அவர்களின் பெற்றோர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறியுள்ளனர். 

சரியான வழிகளைப் பின்பற்றி அனைவரும் 100% தேர்ச்சி பெற வாய்ப்புகளையும் சரியான நெறிமுறைகளையும் காட்டிய முதல்வர் அருட் சகோதரி: ரோஸ்லின் அவர்களுக்கும் ஆசிரிய,ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன், மூணார்.

Comments