கோவை ஏ.ஜே.கே.கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கிச்சன் கார்னிவெல் உணவு திருவிழா!!


கோவை ஏ.ஜே.கே.கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் கிச்சன் கார்னிவெல் உணவு திருவிழா!!ஓயே பஞ்சாபி எனும் தலைப்பில் நடைபெற்ற இதில், நூறுக்கும் மேற்பட்ட பஞ்சாபி உணவு வகைகளை சுவைத்து மகிழ்ந்த பொதுமக்கள்.

கோவை நவக்கரை பகுதியில் அமைந்துள்ள ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியின்   கேட்டரிங் சயின்ஸ்   மற்றும் உணவக  மேலாண்மைத்துறை சார்பாக ,ஒவ்வொரு ஆண்டும் இந்திய உணவுகளின் பாரம்பரிய  சிறப்பை எடுத்து காட்டும் விதமாக கிச்சன் கார்னிவல் எனும் உணவு திருவிழா நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக   2024 ஆம் ஆண்டிற்கான கிச்சன் கார்னிவல் உணவு திருவிழா ஓயே பஞ்சாபி உணவுத்திருவிழா' எனும் தலைப்பில் நடைபெற்றது.. முன்னதாக இதன் துவக்க விழாவில்,

ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியின் செயலர், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கன்வீனர் கமிட்டி குழு உறுப்பினர், முனைவர்.பேராசிரியர் அஜீத் குமார் லால் மோகன்  குத்துவிளக்கேற்றி உணவுத் திருவிழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக,கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை ரெசிடென்சி டவர்ஸ் இயக்குனர், சார்லஸ்ஃபேபியன்  ராடிசன் ப்ளு தலைமை சமையல் கலை நிபுணர் பால் நவின் சந்தர் , ஐடிசி ஹோட்டல் தலைமை  சமையல் கலை நிபுணர்  கபில்தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர். துவக்க விழாவில் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் ராஜு அனைவரையும் வரவேற்றார்..

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, உணவுத்திருவிழாவின் தனிச்சிறப்பு மலரை  ஏ.ஜே.கே. கலை அறிவியல் கல்லூரியின் செயலர் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கன்வீனர் கமிட்டி குழு உறுப்பினர்  முனைவர்.பேராசிரியர் அஜீத் குமார் லால் மோகன்  வெளியிட்டார்..உணவு திருவிழாவில்,பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய உணவு மற்றும் கலாச்சார சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக பல்வேறு உணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டன.. இதில்,பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளாக சாலட்,சட்னி வகைகள்,தந்தூரி வகை ரொட்டிகள்,ரைத்தா எனும் தயிர் உணவுகள்,இனிப்பு என என பல்வேறு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.குறிப்பாக

அசைவ உணவு வகைகளாக,, வறுத்த சிக்கன், அங்கார சிக்கன், பட்டியாலா தவா மீன் உள்ளிட்ட 'ஸ்டார்டர்ஸ்' வகைகள் என  , 100க்கும் மேற்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகள் காட்சி படுத்தப்பட்டன..

உணவுத்திருவிழாவின் ஒரு பகுதியாக , ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மைக்ரோகிரீன்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு உணவுகள் மற்றும் அது குறித்த பயன்களும் காட்சிப் படுத்தப்பட்டன.

பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய ஆடை அலங்கார அணிவகுப்பு, நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் பஞ்சாப் உணவு அருந்தியபடி ரசித்தனர்.மாலை துவங்கிய உணவு திருவிழாவில்,கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments