அரிசி கொம்பன் யானைக்கு நிபுணர் குழு வைக்க அரசு தயார் உயர் நீதிமன்றம் செல்ல முடிவு???
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதி அருகே உள்ள சின்ன கானல் பஞ்சாயத்து பகுதியில் பல வருடங்களாக யானைகள் மக்களின் வாழ்வாதாரங்களை பாதித்து வந்தது அனைவரும் அறிந்தது. அதில் அரிசி கொம்பன், சக்கை கொம்பன், முறிவாலன் எனப்படும் யானைகள் ஆங்காங்கே பல பேரின் உயிரை வாங்கியும் மக்களின் வசிக்கும் வீடுகளை சேதப்படுத்தியும் வாழ்வாதாரங்களை அழித்தும் வந்தது வருத்தத்துக்குரியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சில மாதங்களுக்கு முன்பாக அரிசி கொம்பனை பகுதியில் இருந்து கடத்த வேண்டும் என்ற மக்கள் எதிர்ப்பின் படி அவற்றை தமிழ்நாட்டில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் கொண்டு சேர்க்கப்பட்டது.
தற்பொழுது அரிசிகோவமனை மீண்டும் இப்பகுதிக்கு கொண்டு வர ஒரு நிபுணர் குழுவை கேரளா அரசு தயார் செய்துள்ளது. இதன் பாகமாக நிபுணர் குழு கொடுக்கும் அறிக்கை மாறுபாடாக இருந்தால் மீண்டும் அரிசி கொம்பன் யானை இங்கே விடப்படும் மீண்டும் இதே தொந்தரவுகளை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என மக்கள் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.
மட்டுமல்லாது அது சுற்றுலாத்தலமாக வளர்ந்து வரும் பகுதி வாகனங்கள் இரவு நேரங்களில் செல்வதற்கும் மற்ற எல்லா வளர்ச்சிக்கும் தடையாக அமையும் எனவும் உடனடியாக சின்னக்காணல் பஞ்சாயத்து சார்பில் அனைத்து வார்டு மெம்பர்களும் உடனடியாக அவசர கூட்டம் நடத்தி இன்று உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக தெரிவித்துள்ளனர். இதில் அனைத்து கட்சி மேம்பர்கள் பஞ்சாயத்து பிரசிடெண்ட் ஸ்ரீ குமார்அவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இதற்கான தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.
Comments