தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி கோவையில் நடைபெற்றது!!


சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பாக கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டியில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பாக ,தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் கோவை டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட சிலம்பாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.குறிப்பாக அதிகமான வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..போட்டியை முன்னதாக ஆதி அறக்கட்டளை நிறுவனர் கவிதா மற்றும் மருத்துவர் பிரபா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி சிலம்பாட்ட போட்டியை துவக்கி வைத்தனர்..

இந்த போட்டியில் ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு ,சித்திரை சிலம்பம், வாள் வீச்சு, சிலம்பு சண்டை, அலங்கார வரிசை,குத்துவரிசை, மான் கொம்பு, வேல் கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் 12 தமிழ் பாரம்பரிய கலைகளை உள்ளடக்கிய   பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் சிலம்பத்தை லாவகமாக சுழற்றி,  சக போட்டியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி காட்டினர்.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியாவால்  பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களும், வெற்றி கோப்பைகளும், ரொக்க பரிசுகளும்  வழங்கப்பட்டன. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெறும்  சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள் தெற்காசியா மற்றும் ஆசிய சிலம்பாட்ட போட்டிகளில் பங்கு பெறவும் வாய்ப்புகள் வழங்கப்படும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். முன்னதாக நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில்,சிலம்பம் அசோசியேசன் ஆப் இந்தியா தலைவர் முகம்மது சிராஜ் அன்சாரி,பொது செயலாளர் தியாகு நாகராஜ்,தொழில் நுட்ப இயக்குனர் பாக்கியராஜ்,இணை செயலாளர் பாஸ்கர்,மகளிர் பிரிவு சங்கீதா,மாநில தலைவர் பாலமுருகன்,மாநில செயலாளர் அர்ஜூன்,துணை தலைவர் ராஜா,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டியின் நடுவே வளரி சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்த இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் போட்டியாளர்கள்,பார்வையாளர்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

-சீனி, போத்தனூர்.

Comments