மூணாறில் வரலாறு காணாத வெப்பம்!!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மிக அதிகம் சுற்றுலா மையங்களைக் கொண்ட மூணாறு பகுதியில் ஏராளமான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர்.
தற்பொழுது மூணாறில் கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடுகையில் வரலாறு காணாத அளவில் வெப்பம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா வந்த பயணிகள் தவிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் தங்களது கோடை கால விடுமுறையில் தென்னகத்து காஷ்மீர் எனப்படும் மூணாறில் ஆண்டு முழுவதும் நிலவும் மாறுபட்ட காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதுண்டு.
அதுபோன்று தற்போது கோடையில் இருந்து விடுபட குளுமையை தேடி வந்த பயணிகள் வழக்கமான காலநிலை இன்றி பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். இப்பகுதியில் நிலவும் வெப்பத்தால் நிம்மதி இழந்து தவிக்கின்றனர், சில நேரங்களில் மாட்டுப்பெட்டி, குண்டலை போன்ற படகு சவாரி நிலையங்களில் சில நேரங்கள் டிக்கெட் கிடைப்பதற்கு தாமதங்கள் இருப்பதாலும் வெயிலின் அதிகரிப்பு கூடுதலினாலும் பல சுற்றுலா பயணிகளும் சிறிய நேரத்தில் தங்களது இருப்பிடத்திற்கு செல்கிறார்கள்.
மூணாறில் கோடை காலங்களில் குறைந்தபட்ச வெப்பம் 10 டிகிரி முதல் அதிகபட்ச வெப்பம் 24 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். ஆனால் இந்தாண்டு கடந்த 25 ஆண்டுகளை ஒப்பிடுகையில் வரலாறு காணாத அளவில் வெப்பம் அதிகரித்தது. குறைந்தபட்ச வெப்பம் 11 டிகிரி முதல் அதிகபட்ச வெப்பம் 30 டிகிரி செல்சியஸ் வரை இருந்தது.
ஏப்.28,29 தேதிகளில் 29 டிகிரியாக இருந்த வெப்பம் ஏப்.30ல் 30 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்தது. கடந்த இரண்டு நாட்களாக 28 டிகிரி செல்சியஸ் இருந்தது. இதற்கு முன் அதிகபட்சமாக கடந்த 2021 மார்ச் 9ல் வெப்பம் 28 டிகிரி செல்சியஸ் நிலவியது குறிப்பிடதக்கது.
வெப்ப அதிகரிப்பு காரணமாக மூணாறு பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தவிக்கின்றனர்.இந்நிலையில் இங்கு கோடை மழை குறைந்தது. கடந்தாண்டு ஜன. 1 முதல் ஏப்.30 வரை 35.47 செ.மீ., மழை பதிவான நிலையில் இந்தாண்டு அதே கால அளவில் 15.52 செ.மீ., மழை பெய்தது. இது கடந்தாண்டை விட 20.18 செ.மீ., குறைவாகும்.
மற்றும் தேயிலை பயிரிடுவதற்காக கூடுதலான மரங்களையும் அழித்ததன் காரணமே மழை குறைவு மற்றும் அதிகம் வெப்பம் கூடுவதற்கான காரணம்.
அதிக வெப்பம் காணப்படும் சுற்றுலா தலங்களில் சுற்றுலாப் பயணிகள் குடைகளைப் பிடித்தும் நிழற்குடைகளை தேடியும் ஏதாவது மரத்தின் கீழ் நின்றால் குளிர்ச்சி கிடைக்கும் என மரங்களையும் தேடி நிற்கின்றனர்.
நாளை வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா, மூணாறு.
Comments