நாளைய வரலாறு செய்தியின் எதிரொலி மற்றும் வால்பாறை வணிகர் சம்மேளனம் அமைப்பின் கோரிக்கையின் எதிரொலி.. கோவை மாவட்ட வன அலுவலர் வால்பாறையில் ஆய்வு!!
கோவை மாவட்டம் வால்பாறையில் வன விலங்குகளால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுவதால் இப்பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள், மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் மிகுந்த மன வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 8.5.2024 அன்று வால்பாறை வில்லோனி எஸ்டேட் அருகே நெடுங்குன்று செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதி சேர்ந்த ரவி என்பவரை யானை தாக்கி உயிர் இழந்ததை தொடர்ந்து ஆனைமலை புலிகள் காப்பகம் துனை இயக்குநர், (கூடுதல் பொருப்பு) பொள்ளாச்சி அவர்கள் நெடுங்குன்று செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்று உயிர் இழந்த ரவி குடுபத்தை நேரில் சந்தித்து இறங்கல் தெரிவித்து அருதல் கூறினார்.
மேலும் நெடுங்குன்று செட்டில்மென்ட் மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு தேவைபடும் சாலை, வீட்டு ஓடு, சோலார் வேலி ஆகியவற்றை குறித்து கேட்டரிந்து விரைவில் அரசு திட்டத்தின் கீழ் செய்து தரப்படும் கூறினார்.
இவரது வருகையால் அப்பகுதியில் இருக்கும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது என்பதை அறிய முடிகிறது. இவரை போல அரசு உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தால். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயரும் அதேசமயம் இந்த மாதிரி உயிர் இழப்பும் ஏற்படாது இவரது வருகை உண்மையாலும் வரவேற்கக்கூடியது மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
இவரது வருகையே அறிந்த வால்பாறை வணிகர் சம்மேளனதிண் நிர்வாகிகள் கூறுகையில் இவரது வருகை பாராட்டுக்குரியது வால்பாறை பகுதியில் வனத்துறை சுற்றுலா பயனிடம் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் கட்டணத்தை பெறுவது மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார்கள்.
வால்பாறை மற்றும் எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்கு உலா வரும் போது பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வனவிலங்கு வந்தால் வனத்துறை போதிய அளவு பாதுகாப்பு கொடுத்தது ஆனால் இன்று அனைத்தும் தலைகீழாக மாறி கேள்விக்குறியாக உள்ளது.
தற்பொழுது போதிய அளவு வேட்டை தடுப்பு காவலர்கள் இல்லை மேலும் அதற்கான உபகரணங்களோ வழங்குவதில்லை இதை கருத்தில் கொண்டு மாவட்ட வன அலுவலர் இப்பகுதியில் இருக்கும் வணிகர் சம்மேளனம் மற்றும் இதர பொதுநலமுள்ள அமைப்பின் நிர்வாகிகள் இப்பகுதியில் ருக்கும் அனைத்து அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியாளர் தலைமையில் ஒரு சிறப்புமிக்க ஆலோசனைக் கூட்டத்தை வால்பாறையில் நடத்தி சாமானிய மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம், வால்பாறை.
Comments