கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக பெங்களூர்-திருவனந்தபுரத்திற்கு சிறப்பு ரயில்!!!
கோடை மற்றும் விஷு விடுமுறையைக் கருத்தில் கொண்டு, நெரிசலை தவிற்கும் விதமாக கொச்சுவேலி (திருவனந்தபுரம்) - SMVT பெங்களூரு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவிப்பு.
இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொச்சுவேலி - எஸ்எம்விடி பெங்களூரு இடையே போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக சிறப்பு ரயில்கள்:
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரயில் எண்.06083 கொச்சுவேலி - SMVT பெங்களூரு சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து நாளை (9ம் தேதி) முதல் மே 28ம் தேதி வரை செவ்வாய்க்கிழமை களில் மாலை 6.05க்கு புறப்படும் . மறுநாள் காலை 10.55 மணிக்கு SMVT பெங்களூரு சென்றடையும்.
ரயில் எண்.06083 கொச்சுவேலி - SMVT பெங்களூரு சிறப்பு ரயில் கொச்சுவேலியில் இருந்து நாளை (9ம் தேதி) முதல் மே 28ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மாலை 6.05க்கு புறப்படும். மறுநாள் காலை 10.55 மணிக்கு SMVT பெங்களூரு சென்றடையும்.
ரயில் எண்.06084 SMVT பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில் SMVT பெங்களூரில் இருந்து வரும் 10ம் தேதி முதல் மே 29 வரை புதன்கிழமைகளில் மதியம் 12.45 மணிக்குப் புறப்படும். அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
பெட்டிகள்: ஏசி 3-அடுக்கு & ஸ்லீப்பர் வகுப்பு
நிறுத்தங்கள்: கொல்லம், காயங்குளம், மாவேலிகரா, செங்கனூர், திருவல்லா, சங்கனாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை மற்றும் கிருஷ்ணராஜபுரம்.
ரயில் நிலையங்களை சென்றடையும் நேரங்கள்:
ரயில் எண்.06083 கொச்சுவேலி - SMVT பெங்களூரு சிறப்பு ரயில்:
(செவ்வாய் கிழமைகளில்)
போதனூர் – 01.58 / 02.00 மணி; திருப்பூர் - 03.15 / 03.17 மணி; ஈரோடு - 04.10 / 04.20 மணி; சேலம் ஞாயிறு - 05.07 / 05.10 மணி.
ரயில் எண்.06084 SMVT பெங்களூரு - கொச்சுவேலி சிறப்பு ரயில்:
(புதன்கிழமைகளில்)
சேலம் ஞாயிறு - 16.57 / 17.00 மணி; ஈரோடு - 17.50 / 18.00 மணி; திருப்பூர் - 18.43 / 18.45 மணி; போத்தனூர் - 20.15 / 20.20 மணி இவ்வாறு தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.
Comments