இந்தியா முழுவதும் மாற்றுத்ழிறனாளிகள் பயன் பெறும் விதமாக இலவச செயற்கை மூட்டு முகாம் நடைபெற உள்ளது!!


கோவையில் வரும்  28-ம் தேதி, நாராயண் சேவா சன்ஸ்தான்,எனும் தன்னார்வ அமைப்பு சார்பாக மாபெரும் இலவச  மாடுலர் செயற்கை மூட்டு முகாம் நடைபெற உள்ளது.

ராஜஸ்தானின் உதய்பூர்வநகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், நாராயண் சேவா சன்ஸ்தான்,எனும் தன்னார்வ அமைப்பினர் இந்தியா முழுவதும் மாற்றுத்ழிறனாளிகள் பயன் பெறும் விதமாக இலவச செயற்கை மூட்டு முகாமை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வமைப்பினர் , தமிழகத்தின் முதன் முறையாக கோவையில், மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக தனது முதல் மெகா இலவச செயற்கை மூட்டு முகாமை நடத்த உள்ளனர்.ஏப்ரல் மாதம் 28 ந்தேதி நடைபெற உள்ள இந்த முகாம் சோமையாம்பாளையம்  கே.என்.ஜே.புதூர் பிரிவிலுள்ள மகேஸ்வரி பவனில் நடக்கிறது.

இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள இராஜஸ்தானி சங்க அரங்கில் நடைபெற்றது.இதில் சன்ஸ்தானின் மஹா கங்கோத்ரி தலைவர் ரஜத் கவுர், மற்றும் கமல் கிஷோர் அகர்வால்,சந்தோஷ் முந்த்ரா,கவுதம் ஸ்ரீமல்,பகவான் பிரசாத் கவுர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.தேசிய விருது பெற்றுள்ள நாராயண் சேவா சன்ஸ்தான், விபத்துகள் அல்லது பிற நோய்களால் உடல் ஊனமுற்ற நபர்களுக்கு உதவுவதில் சமூக அக்கறையுடன் செயல்படுவதாக தெரிவித்தனர். 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த 39 ஆண்டுகளாக மனிதநேயம் மற்றும் இயலாமைத் துறைகளில் சேவை செய்து வரும் இந்த அமைப்பு தமிழக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ வேண்டும் என்ற உறுதியான உறுதியுடன், மாபெரும் இலவச நாராயண் செயற்கை மூட்டு அளவீட்டு முகாமை கோவையில் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.1021 வது முகாமாக நடைபெற உள்ள இதில் மாற்றுத் திறனாளிகள் சன்ஸ்தானின் அனுபவம் வாய்ந்த மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த எலும்பு மூட்டு மருத்துவர் மற்றும் செயற்கை மூட்டு மருத்துவர் குழுவால் பரிசோதிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட வார்ப்பு மூலம் உயர்தர, இலகுரக மற்றும் நீடித்த செயற்கை உறுப்புகளுக்கான அளவீடுகள் எடுக்கப்படும். இந்த நபர்கள், தோராயமாக இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சன்ஸ்தானால் ஏற்பாடு செய்யப்பட்ட மட்டு செயற்கை மூட்டு விநியோக முகாமில்,  அளவீடுகளின் அடிப்படையில் இலவசமாக பொருத்தி கொடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இந்த முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் கலந்துகொள்ளும் வாய்ப்புள்ள நிலையில், 800க்கும் மேற்பட்ட நபர்களுக்கான பதிவுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Comments