விளாத்திகுளத்தில் "எம்ஜிஆர் வேடமணிந்தும் எம்ஜிஆர் பாடல் பாடியும்" அதிமுகவினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு!!
தமிழக மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் ஏப்ரல் 17ம் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சிதம்பரம் நகர், பங்களாதெரு உள்ளிட்ட பகுதிகளில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து வீடு வீடாக சென்று, அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் அதிமுக தொண்டர் ஒருவர் எம்ஜிஆர் வேடமணிந்து "அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா" என்ற பாடலை பாடி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கான ஏற்பாட்டினை விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து ஏற்பாடு செய்திருந்தார், இந்நிகழ்வில் ஜெயலலிதா பேரவை வரதராஜ பெருமாள், மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், ஆனந்த், மகளிர் அணி ஒன்றிய தலைவி சாந்தி மற்றும் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.
Comments