மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு!!
கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஐந்து தங்கம் உட்பட இருபத்தைந்து பதக்கங்கள் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மை கராத்தே இண்டர்நேஷனல் கராத்தே பயிற்சி மையத்தில் ஐந்து வயது முதல் கல்லூரி செல்லும் மாணவ,மாணவியர்கள் வரை தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது..இந்த மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவ,மாணவிகள் மாவட்ட, மாநில,தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில், சப்- ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகியோருக்கு பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.. கோவை,பொள்ளாச்சி,காரமடை,என பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இதில், தனிநபர் மற்றும் குழு என கட்டா, குமித்தே போட்டிகள் நடத்தப்பட்டன.இந்த போட்டிகளில் கலந்து கொண்ட மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஐந்து தங்கம்,பத்து வெள்ளி,பத்து வெண்கலம் என இருபத்தைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள மை கராத்தே இண்டர்நேஷனல் கராத்தே பயிற்சி மையத்தில் ஐந்து வயது முதல் கல்லூரி செல்லும் மாணவ,மாணவியர்கள் வரை தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது..இந்த மையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவ,மாணவிகள் மாவட்ட, மாநில,தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள் சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற இந்த போட்டியில், சப்- ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகியோருக்கு பல்வேறு எடை பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.. கோவை,பொள்ளாச்சி,காரமடை,என பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இதில், தனிநபர் மற்றும் குழு என கட்டா, குமித்தே போட்டிகள் நடத்தப்பட்டன.இந்த போட்டிகளில் கலந்து கொண்ட மை கராத்தே இண்டர்நேஷனல் பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவ,மாணவிகள் ஐந்து தங்கம்,பத்து வெள்ளி,பத்து வெண்கலம் என இருபத்தைந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
இந்நிலையில் கராத்தே போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மை கராத்தே இண்டர்நேஷனல் மையம் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில், மையத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ் மற்றும் , பயிற்சியாளர்கள், சிவமுருகன்,அரவிந்த்,விது சங்கர்,சரவணன்,விமல் பிரசாத்,பவிலாஷ், நரேந்திரன்,பிரசாந்த்,தேவதர்ஷினி மற்றும் மாணவர்கள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments