ஓட்டுப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வாகன பேரணி நடைபெற்றது....
இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோவை மாநகராட்சியின் துணை ஆணையர் செல்வசுரபி கலந்து கொண்டு கொடியசைத்து இந்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.கே. குழுமத்தின் தலைவர் மணிகண்டன் கூறியதாவது. கோவையில் இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் 70 சதவீகிதம் -அல்லது 75 சதவீகித வாக்கு பதிவு மட்டுமே பதிவாகின்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மீதமுள்ள 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் பேர் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பதை ஆராய்ந்து - அவர்களுக்கு தேர்தல் நேரத்தில் உதவிபுரிய மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து வாகன வசதிகளை இந்த ஆண்டு நமது அறக்கட்டளை சார்பாக ஏற்படுத்தி உள்ளதாகவும் ஆயினும் வாக்குகளிப்பதன் அவசியத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியாக கூறினார். நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து புறப்பட்ட இந்த வாகன பேரணியில் சுமார் 500"க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பதாதைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்றார். முன்னதாக அனைவரும் வாக்களிப்போம் என மனித சங்கிலியாக நின்று உருதி மொழி எடுத்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-சீனி, போத்தனூர்.
Comments