பிரதமரை 29 பைசா என அழைக்க வேண்டும் தூத்துக்குடி பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியா கூட்டணியில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழியை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் - மாப்பிள்ளையூரணியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடந்த 2019 ஜனவரி 27 மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டினார். அப்போது ஒரு கல்லை மட்டும் அவர் வைத்தார். அந்த ஒத்த கல்லையும், நான் தூக்கிட்டு வந்து விட்டேன். இப்போது கல்லை காணோம் எனத் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். மருத்துவமனைக் கட்டி முடிக்கும் வரையில், நான் அந்த கல்லை திருப்பிக் கொடுக்க மாட்டேன். 2019-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை, பணம் ஒதுக்கவில்லை. பாஜக ஆளும் ஆறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு மட்டும் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. இதுதான் தமிழ்நாட்டு மக்கள் மீது அவர் வைத்துள்ள, அக்கறை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பிரதமர் மோடிக்கு 29 பைசா நான் ஒரு பெயர் வைத்திருக்கிறேன். அதற்கு காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி வரி கட்டுகின்றோம். மத்திய அரசு அதை வாங்கிப் பிரித்து அனைவருக்கும் சமமாக தரவேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து 1 ரூபாய் வாங்கிய மத்திய அரசு, வெறும் 29 காசு தான் கொடுக்கிறது.உத்தரப் பிரதேசம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக ஆளும் மாநிலத்தில், ஒரு ரூபாய் ஜிஎஸ்டி கட்டினால், 3 ரூபாய் திருப்பி கொடுக்கின்றது, மத்திய அரசு. பீகார் மாநிலத்தில் ஒரு ரூபாய் கட்டினால் ஏழு ரூபாய் கொடுக்கின்றது. தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கரை இல்லை.
அதனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் 29 பைசா' என வழங்குவதாகவும் காரணம் கூறினார்.மேலும் பேசிய அவர், 'தமிழ்நாட்டு உரிமைகளை யார் மதிக்கிறார்களோ? தமிழ்நாட்டு நிதியயை ஒழுங்காக யார் தருகிறார்களோ? அவர் பிரதமராக வர வேண்டும் எனவும், அதற்கு மு.க.ஸ்டாலின் யாரைக் கை காட்டுகின்றாரோ அவர்தான் அடுத்த ஒன்றிய பிரதமர் எனவும் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.
Comments