கோவில்பட்டியில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் கடம்பூர் ராஜூ கேள்வி திமுக கூட்டணி கட்சிகள் ஏன் வாய் திறப்பதில்லை.?????

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது திமுக அரசை கண்டித்து, மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியது: தமிழ் நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் வயது வித்தியாசம் இல்லாமலும் ஐந்து வயது குழந்தைகள் முதல் 75 வயதில் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்களை பாதுகாப்பு தொடர்பான ஆர்ப்பாட்டம், கடந்த மூன்று ஆண்டுகளில் போதைப்பொருட்கள் புழக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. ஜபார் சாதிக் மீது போதைப்பொருட்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் இதைப் பற்றி வாய் திறப்பதில்லை ,அவர் திமுக குடும்பத்தில் மிக நெருக்கமாக இருந்துள்ளார்.

மக்களுக்கு பாதுகாப்பு தரவேண்டிய அரசு இந்த வேலையை செய்துள்ளது. அந்த பணத்தை வைத்து சினிமா தயாரிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு மிகவும் மோசம் உள்ளது இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் Ex MLA, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் கவியரசன் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஆவின் சேர்மன் தாமோதரன், நகர செயலாளர் விஜாயபாண்டியன் ஒன்றிய கவுன்சிலர் அழகர்சாமி மகளிர் அணி செயலாளர் பத்மாவாதி மாவட்ட கலைக்பிரவு செயலாளர் போட்சாமி முன்னாள் மாவட்ட சேர்மன் சத்யா உட்பட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Comments