இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு எதிராக மனு!!!

இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்து அதற்கான பணிகளை துவங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவிக்கும் முயற்சியிலும் சில அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளராக அறிவித்தும் உள்ளனர் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பிரச்சாரங்களை தொடங்க உள்ளனர்.

தேர்தல் பிரச்சாரத்தில் இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்கு எதிராக தாக்கலான மனுவை நாளை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது அந்த பொதுநல மனுவில், இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் சின்னத்தை முடக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த மனு மீது நாளை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஈசா, ராஜேந்திரன்.

Comments