ஒட்டப்பிடாரம் அருகே ஒசநூத்து கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த இருவர் கைது!!

ஒட்டப்பிடாரம் அருகே மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது செய்யபட்டார் போலீசார் அவரிடமிருந்த மது பாட்டில்களை மற்றும் பணம்  பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே  ஒசநூத்து கிராமத்தில் அரசு பானங்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து ஒசநூத்து  பகுதியில் சந்தேகத்துக்குரிய இடங்களில் ஒட்டப்பிடாரம்    போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது  சுடலைமணி வயது 49 தகப்பனார் சேர்ப்பாலன் நடுத்தெரு குலசேகரநல்லூர்  மற்றும் சேகர் வயது 60 தகப்பனார் பெயர் சந்தனம் தெற்குத் தெரு கீழமங்கலம்  அவர்களிடம் இருந்து 10 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து  2 நபரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர், 

-முனியசாமி.

Comments