ஆனைமலை கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாமிற்கு அழைப்பு!!

கோவை மாவட்டம் ஆனைமலை கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கோவை அம்பிகா காட்டன் மில்ஸ் லிட்., கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கோவை கே.ஜி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் வருகின்ற சனிக்கிழமை 9.03.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. 

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அன்பார்ந்த பெற்றோர்களுக்கும், பொது மக்களுக்கும் வருகின்ற 09.03.2024 சனிக்கிழமை அன்று நமது பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

கோவை கே.ஜி மருத்துவமனையின் சிறந்த மருத்துவர்களால் இம்முகாம் நடத்தப்பட உள்ளது. பரிசோதனைக்குப் பின் கண் அறுவை சிகிச்சை தேவைப்படுமாயின் இலவசமாக செய்து தரப்படும். மருத்துவமனையின் சார்பாக இலவசமாக பேருந்து வசதி செய்து தரப்படும் . எனவே உங்கள் உறவினர்கள் நண்பர்கள் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் அனைவருக்கும் இந்த செய்தியை கூறி தேவைப்படுவோர் பயனடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் நமது பள்ளியின் சார்பில் நமது பள்ளியில்  நடைபெறும் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு பெற்றோர்களுக்கும்,  பொதுமக்களுக்கும் பள்ளியின் தாளாளர் D.சண்முகம் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார். 

இருக்கும் வரை ரத்த தானம், இறந்த பிறகு கண் தானம் என்ற உயரிய சிந்தனையோடு 

தமிழக துணைத் தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.


Comments