கோவை கேட்வே மருத்துவமனை சார்பாக குடலிறக்க அறுவை சிகிச்சை முறை!! பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம்!!
கோவை கேட்வே மருத்துவமனை சார்பாக குடலிறக்க அறுவை சிகிச்சை முறையில் உள்ள பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. ஹெர்னியா எனும் குடலிறக்கம் நோய் என்பது, பொதுவாக பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பலவீனமான வயிற்றின் தசைச்சுவர் துவாரம் வழியே குடலின் ஒரு பகுதி அல்லது கொழுப்பு திசு வெளியில் வயிற்று பகுதியில் பிதுங்கி வயிற்று வலி,வாந்தி என பல்வேறு அறிகுறிகள் ஏற்படுகின்றன. இதற்கான அறுவை சிகிச்சை முறைகளில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் வந்துள்ள நிலையில், இது குறித்த ரோட் டூ சர்ஜ் எனும் தலைப்பில் மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் கோவை ரத்னா ரீஜன்ட் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
கோவை கேட் வே மருத்துவமனை சார்பாக நடைபெற்ற இது குறித்து மருத்துவமனையின் தலைவர் டாக்டர் செந்தில் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது பேசிய அவர்,குடலிறக்க அறுவை சிகிச்சையில் பல்வேறு நவீன தொழில் நுட்பங்கள் வந்துள்ளதாக கூறிய அவர்,குறிப்பாக ஹெர்னியாவுக்கான நுண்துளை அறுவை சிகிச்சையால்,குறைந்த நேரமே எடுத்து கொள்வதுடன்,நோயாளி வேகமாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என தெரிவித்தார்.
மேலும், ஹெர்னியாவுக்கு பெரும்பாலும் மெஷ் ரிப்பேர் என்று சொல்லப்படும் பாலிபுரோபிலீனால் செய்யப்பட்ட ஒரு வகையான வலைபோன்ற பொருளைக் கொண்டு தசையை வலுப்படுத்தும் அறுவைச் சிகிச்சைதான் மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சையிலும் தற்போது நவீன வகை சிகிச்சை முறைகள் இருப்பதாக அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கம், நாடு முழுதும் உள்ள குடலிறக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் அறிவை பகிர்வதற்கும், மருத்துவ நடைமுறையில் உள்ள சிறந்த தரத்தை மேம்படுத்துவதற்கும் பயனுள்ளதாக இருந்ததாக கருத்தரங்கில் கலந்து கொண்ட மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்த சந்திப்லின் போது,மருத்துவர்கள் பியூஷ் பட்வா,கார்த்திக்,அனிரூத்,சபரிகிரீசன் ஆகியோர் உடனிருந்தனர்.
-சீனி, போத்தனூர்.
Comments