அடிமாலி நேரியமங்கலம் சாலையில் சோலார் லைட் வைக்க கோரிக்கை!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் இருந்து கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. மூணாறுக்கு சுற்றுலா வரும் சுற்றுலாப் பயணிகள் பல நாடுகளில் இருந்தும் பல பகுதிகளில் இருந்தும் வருவது வழக்கம். அவர்களுக்கு ஏற்றதாக விமான நிலையங்களுக்கு செல்லவும் ரயில் பயணங்களை மேற்கொள்ளவும் அடிமாலி வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. ஆனால் மூணாறில் இருந்து நேரியமங்கலம் வழியாக அடிமாலி செல்லும் வழி முழுவதும் அடர்ந்த காடுகளால் நிறைந்து காணப்படுகிறது. நீண்ட நேரம் பயணிகள் பயணிக்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பகுதியில் இடையே காட்டு விலங்குகள் யானைகளின் தொந்தரவு அதிகமாக இருப்பதாலும் மட்டுமல்ல பாதையில் வாகன பழுது ஏற்பட்டாலும் மற்றவர்களை தொடர்பு கொள்ள தொலைபேசி நெட்வொர்க் சரியாக கிடைப்பதில்லை இரவு நேரங்களில் பயணிக்கும் பயணிகள் பயத்துடனே பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
எனவே சாலையில் சோலார் மின்விளக்குகளை அமைக்க வேண்டும் என பயணிகளின் சார்பில் மற்றும் வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டுனர்களின் கோரிக்கையாக உள்ளது.
எனவே அரசு மற்றும் சுற்றுலா மேம்பாட்டு துறை இணைந்து உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூனாறு.
Comments