கோவையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாநாடு!!


கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் பாதுகாப்புக்கான நொய்யலும் நாமும்  என்ற விழிப்புணர்வு மாநாடு  தன்னார்வ அமைப்புகள் சார்பில்  நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் சிறுதுளி , இயற்கைக்கான உலகளாவிய நிதியம், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு , கௌசிகா நீர்கரங்கள், சுற்றுச்சூழல் அமைப்பு கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நொய்யலாறு அறக்கட்டளை, குறிச்சி குளம் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 

இந்நிகழ்வில் விவாதங்கள்,  அமர்வுகள் மற்றும் விளக்கக்காட்சிகள் மூலம், பங்கேற்பாளர்கள் நீர் பாதுகாப்பின் அவசரத் தேவையை ஆராய்ந்து, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள புதுமையான தீர்வுகளை வழங்கினர்.

இந்த மாநாட்டின் முக்கிய  நிகழ்வாக "துளி துளியாய் சிறுதுளியை" என்ற 75 நாள் பிரச்சாரம் தொடங்கப்பட்டது, 

இந்த பிரச்சாரத்தின் மூலம்  தண்ணீரை சிக்கனமாகவும், பயனுள்ளதாகவும் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. தண்ணீரை சிக்கனமாக சேமிப்பதற்கான 12 குறிப்புகள் மற்றும் வழிமுறைகள்  அடங்கிய பதாகை வெளியிடப்பட்டது. 

இதில் சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் , பி.பி.சுப்ரமணியம் - உறுப்பினர் சிறுதுளி சதீஷ். ஜெ - அறங்காவலர் சிறுதுளி , பேராசிரியர் முத்துக்குமார் மற்றும் பேராசிரியர் ராஜா, கொங்குநாடு கலைக் கல்லூரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments