இன்று உலக சிறுநீரக தினம்!!
கோவை:உலக சிறுநீரக தினம் மார்ச் 14"ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு நிகழ்வாக கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ("FIMS")ஃபிம்ஸ் மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து 10 நாட்கள் தீவிர கண்கானிப்பில் வைக்கும் கண்காணிப்பு மைய துவக்கவிழா நடைபெற்றது.
விழாவைத் தொடர்ந்து மருத்துவமனையின் தலைவர் மற்றும் மருத்துவர் முருகதாஸ் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று திறக்க பட்ட இம்மையத்தில் உடல் உறுப்பு தானம் பெற்ற பின்னர் அவர்களுக்கு பொருத்த பட்ட உடல் உறுப்புகள் இயங்குகின்றதா, உடலில் என்னேன்ன மாற்றங்கள் உள்ளது என்பதை கண்காணிக்கும் ஐ.சி.யு பிரிவு துவங்கபட்டுள்ளது எனத் தெரிவித்தார். இரு முறைகளில் உடல் உறுப்புகள் தானம் பெறலாம் என கூறிய அவர் ஒன்று குடும்ப உறுப்பினர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறுவது. அடுத்தது தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று ஆணையத்தில் பதிவு செய்து உங்களுக்கான உடல் உறுப்புகளை பெறுவது, இதில் இரண்டாவது முறையில் பெறுவதற்கு தற்போது 43 ஆயிரம் பேர் தற்போது விண்ணப்பித்து உடல் உறுப்புகளுக்காக காத்திருக்கின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர்களுக்கு உடல் உறுப்புகள் கிடைப்பதிற்க்கு காலதாமதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக பொதுமக்களுக்கு உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவு இல்லாததுதான் எனவும் தற்போது முளை சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்குபவர்களின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு முன்வந்து நடத்தி வருவது வரவேற்கத்தக்கதெனவும் குறிப்பாக பொதுமக்கள் உடல் உறுப்புகள் தானம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும் என்று இவ்வாறு மருத்துவர் தெரிவித்தார் தெரிவித்தார்.
-சீனி, போத்தனூர்.
Comments