தூத்துக்குடி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு!!!
தமிழ் நாடு முழவதும் இன்று அஇஅதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்ய எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து, பாராளுமன்ற பொது தேர்தல் 2024 நடைபெற உள்ளதை முன்னிட்டு இன்று 25.3.24 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அஇஅதிமுக வேட்பாளர் திரு.ஆர்.சிவசாமி வேலுமணி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கோ.லட்சுமிபதி இ.ஆ.ப., அவர்களிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்.
இந்நிகழ்வில், அதிமுக மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களுமான கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ, எஸ்.பி. சண்முகநாதன், மாநில வர்த்தகர் அணி செயலர் சி.த. செல்ல பாண்டியன், சின்னத்துரை, ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் சின்னப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட தலைமை நிருபர்,
-முனியசாமி.
Comments