எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!


கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், கழக அமைப்பு செயலாளரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ தாமோதரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் எஸ்.டி பி.ஐ கட்சியின் சார்பில் மாபெரும் சமூக நல்லிணக்க  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி எஸ்.டி.ஐ.பி.கட்சியின் மத்திய மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் ராஜா உசேன், ரவூப் நிஸ்தார், அப்துல்கரீம், அபுதாஹிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டு ஆயிரத்திற்க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்த சமூக நல்லிணக்க  நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், கழக அமைப்பு செயலாளரும் கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன், முன்னாள் ஹஜ் கமிட்டி தலைவரும், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளருமான சி.டி.சி.ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் சி.எஸ்.ஐ. தேவாளயத்தின் பாதர் டேவிட் பர்னபாஸ் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன். சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். மேலும் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில்தான் இஸ்லாமிய மக்களுக்கு என்னற்ற திட்டங்கள் வழங்கப்பட்டதாகவும், குறிப்பாக ஹஜ் பயன மானியத்தை மத்திய அரசு நிறுத்திய நிலையிலும் அண்ணன் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக  அரசு அதிகமான நிதி ஒதுக்கி ஹஜ் யாத்திரையை தமிழகத்தில் இருந்து அதிகமான இஸ்லாமிய மக்கள்  ஹஜ் யாத்திரை செல்ல வழிவகை செய்தார் என்று அதிமுக இஸ்லாமியர்களுக்கு செய்த திட்டங்களை எடுக்குகூறி எஸ்.டி.பி.ஐ.கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

-சீனி, போத்தனூர்.








Comments