கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் வெற்றியைக் கொண்டாடியதாக பொய் வழக்கு! 6 ஆண்டுகளுக்குப் பிறகு 19 முஸ்லிம்கள் விடுதலை!
இந்தியாவுக்கெதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வென்றதை கொண்டாடியதாக தொடரப்பட்ட பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் உள்பட 19 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
2017, ஜூன் 18ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பைகான இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாகக் கோப்பையைத் தட்டிச் சென்றது. இந்த வெற்றியை மத்தியப்பிரதேச மாநிலம், மொஹட் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கொண்டாடும் விதமாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக வெற்றி முழக்கங்களை எழுப்பி, இனிப்புகளை விநியோகித்ததாகவும், பட்டாசுகளை கொளுத்தியதாகவும் பொய்ச்செய்திகள் வெளியாகின.
அதன்பேரில், அந்த கிராமத்தைச் சேர்ந்த 17 இஸ்லாமியர்கள் மற்றும் 2 சிறுவர்கள் மீது பொய்வழக்கு பதியப்பட்டது. அவர்கள்மீது 1860ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் தேசத்துரோகம் மற்றும் கிரிமினல் சதி செய்ததாக பொய்யாக வழக்கு பதியப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பிறகு நடந்ததெல்லாம் அந்த மக்கள் எதிர்பாராதது. கைது, சிறை, போலீஸ் தாக்குதல், தேசத்துரோகிகள் என அவதூறு என பல்வேறு சோதனைகளை, கைதான 19 பேருடன் கிராம மக்களும் சேர்ந்து அனுபவித்தனர். முக்கியமாக, இந்த வழக்கில் கைதான ஒருவர், 2019ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் 2 குழந்தைகளுக்கு தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை, மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. கிராம மக்கள் மீது புகாரளித்த இந்து மதத்தை சேர்ந்தவரும், அரசு சாட்சியும், போலீஸாரின் அழுத்தத்தால் தாங்கள் பொய் சாட்சியம் கூறியதாக நீதிமன்றத்தில் ஓப்புக்கொண்டனர்.
போலீசாரின் அழுத்தத்தை அரசு வழக்கறிஞரும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் உண்மையில்லை எனவும், போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் விசாரணை நடத்திய நீதிமன்றம் தெரிவித்ததுடன், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.
மத துவேஷம் என்ற ஒரு விஷயம், அப்பாவி கிராமத்தினர் 19 பேரின் வாழ்க்கையை 6 ஆண்டுகள் சீரழித்து, சின்னா பின்னமாக்கி இருக்கிறது.
- பாரூக்.
Comments