T N S P C தேர்வுக்கான பயிற்சி வகுப்பு வால்பாறையில் துவக்கம் - தகுதி உள்ளவர்களுக்கு அழைப்பு!!
கோவை மாவட்டம் வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் T N S P C தேர்வுக்காக பயிற்சி வகுப்பு வால்பாறை அரசு கல்லூரியின் முதல்வர் இன்று துவக்கி வைத்த நிலையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பாக பேராசிரியர் கணேசன் பயிற்சி வகுப்பு எடுத்தார்.
இந்நிகழ்ச்சியை வால்பாறை கிளை நூலகர் வேலுச்சாமி ஆய்வு செய்தார். பயிற்சி வகுப்பில் சுமார் 45 பேர் கலந்து கொண்டனர்.
வாரத்தில் சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் வகுப்புகள் நடைபெறும். வகுப்புகளை திறமை வாய்ந்த வல்லுநர்கள் பேராசிரியர் கொண்டு பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை பகுதியில் இருக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இப்பகுதியில் இருக்கும் படித்த இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் பயிற்சி வகுப்பு கலந்து கொள்பவர்கள் வால்பாறை கிளை நூலகத்தில் அணுகு பதிவு செய்து பெற்றுக் கொள்ளுமாறும் நாளைய வரலாறு பத்திரிக்கையின் வாயிலாக இப்பகுதியில் உள்ள படித்த பட்டம் பெற்றவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு பொதுநலத்துடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
-P.பரமசிவம், வால்பாறை.
Comments