விஸ்வ பாரத் மக்கள் கட்சி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

,

விஸ்வ பாரத் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விஸ்வ பாரத் மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக கோவையில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசின் கவனத்திற்குகொண்டு செல்லும் வகையில்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேசிய பொதுச்செயலாளர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சாமிகள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பேசிய பாபுஜி சாமிகள், விஸ்வகர்மா சமுதாய மக்கள் தமிழகத்தில் 85 லட்சம் பேர் பாரம்பரிய குலத்தொழில் செய்பவர்கள்.தற்போது உள்ள சூழ்நிலையில் தொழிலில் இருந்து பலர் வறுமைக்கோட்டில் தள்ளப்பட்டுள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆதலால் தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகர்மா கூட்டமைப்பு மற்றும்விஸ்வ பாரத் மக்கள் கட்சியின் சார்பாக மத்திய மாநில அரசை 5 கோரிக்கை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். விஸ்வகர்மா சமூகப் பெண்கள் பெயரில் இலவச வீட்டு மனை பட்டா,மூணு புள்ளி அஞ்சு இட ஒதுக்கீடு வேண்டும்,ஐந்து தொழிலாளர்களின் பட்டறைகளுக்கு இலவசம் மின்சாரம், கோவில்களில் அறங்காவலர் பணி, அரசு பணி, கூட்டுறவு வங்கிகளில் அப்ரைசர் வேலை நிரந்தரம் செய்ய வேண்டும். ஐந்து அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகள் நிறைவேற்றித் தர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய மாநில அரசின் பார்வை கொண்டு செல்லப்படுவடுவதாக தெரிவித்தார். 

எங்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுக்கு விஸ்வகர்மா சமுதாய மக்களின் நிச்சயம் கிடைக்கும் என்று தேசிய பொதுச்செயலாளர் ஸ்ரீலா ஸ்ரீ பாபுஜி சுவாமிகள் தெரிவித்தார்...கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக முழுவதும் உள்ள விஸ்வ பாரத் மக்கள் கட்சியின் ஆண் பெண் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அவைத்தலைவர் வேலுமணிவில்வராஜன் துணைப் பொதுச் செயலாளர் கார்த்திக்,மாநில மகளிர் அணி செயலாளர் ராதா ராஜன்,மாநில இளைஞரணி செயலாளர்பிரகாஷ்,மண்டல பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம்,வரதராஜ், குழந்தைவேலு,கோவை தெற்கு மாவட்ட லட்சுமணன், மலுமிச்சம்பட்டி மோகன் குமார்,கிழக்கு மாவட்டம் சோமசுந்தரம், வடக்கு மாவட்டம் சம்பத்குமார்,கிட்டு சாமி,மாநகர் மாவட்டம் நாச்சிமுத்து, விஸ்வநாதன் சுப்பையா,ஈரோடு மேற்கு மாவட்டம் மாரிமுத்து, சத்தியமங்கலம் ரங்கநாதன் புளியம்பட்டி பிரேமலதா நாகராஜ்,தேனி மாவட்டம் முத்துக்குமார், ரங்கசாமி, ராமதாஸ், குமார், மதுரை மாவட்டம் நாகராஜன்,திருப்பரங்குன்றம் சண்முகநாதன்,மாநில செயலாளர் திருப்பூர் கணேசன்,கோவை விஸ்வகர்மா மகளிர் சங்கம் லதா,சரஸ்வதி,குளோபல் விஸ்வகர்மா தலைவர் ஸ்ரீதர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments