பகலிலேயே வனவிலங்குகள் தாக்கும் அபாயம்!! கூட்டுறவு வங்கி அருகே உள்ள புதர்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை பகுதி காந்தி சிலை அருகே கூட்டுறவு வங்கி உள்ளது. மேலும் இந்தப் பகுதி ஆனது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இவ்வாறு உள்ள இந்த பகுதியில் செடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி காணப்படுகிறது. இந்த புதர்களுக்குள் சிறுத்தை,கரடி,காட்டு மான்கள், காட்டெருமை, சிங்கவால் குரங்குகள் பன்றிகள் போன்ற வன விலங்குகள் பதுங்கிக் கொண்டால் வெளியே தெரியாது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவ்வழியாக செல்லும் பள்ளி மாணவ மாணவியர் பயந்த நிலையில் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எங்கு நம்மை வனவிலங்குகள் தாக்கி விடுமோ என அச்சத்தில் சென்று வருகின்றனர். அதிலும் இந்த சிங்கவால் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனாலையே பல வியாபாரிகள் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
வால்பாறை டவுன் பகுதியில் புதர்கள் சூழ்ந்து காணப்படும் இடங்களை சுத்தம் செய்து வன விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்
மற்றும்
வால்பாறை
-திவ்யகுமார்.
Comments