கருமலை எஸ்டேட் அருகே சாலை அருகே தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!!!

 

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் பகுதிக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில்  குடி தண்ணீர் குழாய் பதிப்பதற்கு நெடுஞ்சாலையை  ஒட்டி உள்ள பகுதிகளில் பள்ளங்கள் தோண்டி குடிநீர் குழாய் அமைக்கும்  பணிகள் நடைபெற்றது. இந்தப் பணிகள் முடிந்த பிறகும் சாலை அருகே உள்ள பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது எனவே இந்த சாலை வழியாக  செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.    


அப்பகுதியில் அரசு பேருந்துகள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வாகனம் அதிகம் வரும் பச்சமலை சாலையில் ஆபத்தான குழிகளை தோண்டி வைத்து பல மாதங்களாக  குழிகள் அப்படியே உள்ளதால் ஆபத்தான நிலையில்  வாகனங்கள் சென்று வருகின்றன எனவே பெரும் விபத்துகள் ஏதாவது நடைபெறும் முன்பு உடனடியாக நகராட்சி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் குழாய் பதிக்கும் காண்ட்ராக்டர்கள் குழிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments