தூத்துக்குடி அமமுக புறநகர் மாவட்ட சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்.!!!

பொதுச் செயலாளர்  டி டி வி தினகரன்.BE.EX.MLA.EX.MP..,அவர்களின் ஆணையின்படி, துணைப் பொதுச் செயலாளர் கயத்தாறு யூனியன் பெருந்தலைவர் கடம்பூர் இளைய ஜமீன்தார் SVSPமாணிக்கராஜா அவர்களின் ஆலோசனைப்படி தூத்துக்குடி புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அமைந்திருக்கும் ஒன்றிய  செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று  மாலை 6 மணி அளவில்  மாவட்ட  அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. 

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக செய்ய வேண்டிய பணிகளை விரைந்து முடிக்க பொது சேவையில் ஈடுபட என்ன பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி புறநகர் மாவட்ட  செயலாளர்  P.ஜானியல் சாலமோன் மணிராஜ். அவர்களின் தலைமையில், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் நவஜீவன் பெரியசாமி அவர்கள் மற்றும் தூத்துக்குடி புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் உலகையா அவர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர்  கமலக்கண்ணன், தூத்துக்குடி புறநகர கிழக்கு ஒன்றிய  செயலாளர்  ராஜ்கபூர், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய  செயலாளர் கரன்சிங், வர்த்தகரெட்டிபட்டி முத்துக்குமார் மற்றும் துரை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

தூத்துக்குடி மாவட்ட தலைமை நிருபர், 

-முனியசாமி.

Comments