கோவையில் பொருத்தப்பட்டுள்ள சிக்னல்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு!!!


கோவை மாவட்டத்தில் ஏராளமான வணிக நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் இருப்பதால் ஏராளமானோர் தினசரி வேலைக்காகவும், பல்வேறு பணிக்காகவும் சொந்த வாகனங்களிலோ அல்லது பேருந்துகளிலோ அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர்.

கோவையில் பிரதான சாலையாக அவிநாசி சாலை உள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, திருச்சி சாலை, பாலக்காடு சாலை ஆகியவை இருக்கின்றன. இந்த ஆறு சாலைகளும் வெளியூர்களுக்கும் செல்லும் சாலைகள் என்பதால் இந்த சாலைகளில் ஏராளமான வாகனங்கள் பீக் அவர்ஸில் செல்லும்.

இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த ஆண்டு யூடர்ன் திட்டத்தை செயல்படுத்தப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றது. பல்வேறு சாலைகளில் யூடர்ன் மற்றும் ரவுண்டானா ஆகியவை தற்போதும் கோவை மாவட்டத்தில் இருக்கின்றன. அதேநேரம் பல இடங்களில் யூடர்ன் மற்றும் ரவுண்டானா அமைக்க முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் அதிகளவு காணப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்படியான இடங்களில் சிக்னல்கள் இருக்கின்றன. சிக்னல்களே இல்லாத கோவை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் வேறு வழியின்றி சிக்னல்கள் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவை அவிநாசி சாலையில் வரதராஜா மில்ஸ் சிக்னல் மிக முக்கியமான சிக்னல் ஆகும். இந்த சிக்னலிலும் அடுத்ததாக திருச்சி சாலை சுங்கம், காந்திபுரம் பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் மாநகர காவல்துறை சார்பில் அதிநவீன போக்குவரத்து சிக்னல்கள் கண்காணிப்பு கேமராவுடன் அமைக்கப்பட்டுள்ளது

இந்த மூன்று சிக்னல்களும் எப்படி என்றால், போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை தானியங்கி கேமரா மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கும் சென்சார் கேமரா சிக்னல்களாக தற்போது அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமல்லாமல் பாதசாரிகளே பட்டனை அழுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு சாலையை கடந்து செல்லும் வகையிலும் சிக்னல்கள் பொருத்தப்பட்டிருக்கிறது.

காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன போக்குவரத்து சிக்னல்களுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்களை தானியங்கி கேமரா மூலம் கண்டறிந்து அபராதம் விதிக்கும் சென்சார் கேமரா சிக்னல்கள் தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இன்றும் செயல்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

கோவை மாவட்ட தலைமை நிருபர் 

-சி.ராஜேந்திரன்.

Comments