கொடியன்குளம் கிராமத்தில் நியாய விலைக்கடை கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா திறந்து வைத்தார்!!
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் கொடியன்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி ௯மேம்பாட்டு நிதியிலிருந்து 13.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலைக்கடை கட்டிடத்தை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா, யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு செயாலாட்சியர் த பாலமுருகன், கூட்டுறவு சார்பதிவாளர் ஜெயச்சந்திரன், யூனியன் ஆணையாளர் வசந்தா, வட்டார வளர்ச்சி அலுவலர் கிரி, வட்டார வழங்கல் அலுவலர் சுடலைமணி , வருவாய் ஆய்வாளர் ராஜேஷ், கிராம நிர்வாக அலுவலர் நாராயணன், பணி மேற்பார்வையாளர் சங்கர், கொடியன்குளம், ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார், அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அய்யாத்துரை , ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் மாடசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்ட தலைமை நிருபர்,
-முனியசாமி.
Comments