லவ்வர்ஸ் திரைப்பட குழுவினர் கோவையில் பேட்டி!!


கோவை: காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லவ்வர்ஸ் திரைப்பட அறிமுகமாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த படத்தின் நாயகன் மணிகண்டன் நடிகர் டெல்லி கணேஷ் போன்று மிமிக்ரி செய்து திரைப்படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வரும் பிப்ரவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ள லவ்வர்ஸ் திரைப்பட தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன், நடிகர் மணிகண்டன்,நடிகை கௌரி பிரியா, துணை நடிகர் கண்ணன் ரவி ஆகியோர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மணிகண்டன், கல்லூரி காலம் முடிந்த பிறகு இளைஞன் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் குறித்த கதை அம்சத்துடன் காதலை மையமாக கொண்டு இந்த படம் தயாராகி இருப்பதாகவும் திரைப்படம் என்ற ஒரு எண்ணம் மக்களுக்கு வராத மிக தத்ரூபமாக வாழ்க்கையை எடுத்து கூறும் விதத்தில் படம் உருவாகி உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். 

இந்த படத்தின் கதாநாயகியாக அறிமுகம் ஆகியுள்ள கௌரி மற்றும் தான் உட்பட அனைவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளதாகவும் வருகிற ஒன்பதாம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாகவும் கூறினார்.மேலும் ஜெய்பீம் படத்திற்கு தனக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி வருத்தப்படவில்லை எனவும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போதும் மிக விரும்பியே தான் நடிப்பதாகவும் சுட்டி காட்டினார். 

நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும் கூறிய அவர், தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். தொடர்ந்து நடிகர் டெல்லி கணேஷ் குரலில் மிமிக்கிரி செய்த மணிகண்டன் லவ்வர்ஸ் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

-சீனி, போத்தனூர்.

Comments