கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது!!
கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள் மேடையில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழகுத் துறை இணைந்து இவான்ஸா 24 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சி துவக்க விழாவில் கல்லூரியின் சேர் பெர்சன் நந்தினி ரங்கசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக பெங்களுருவை சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மீனு.எம் பிள்ளை கலந்து கொண்டு பேசுகையில்; தற்போது ஆடை வடிவமைப்பு துறையில் நல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும், குறிப்பாக இளம்பெண் தொழில் முனைவோர்களாக இதில் பெண்கள் சாதித்து வருவதாக கூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் யசோதா,முதல்வர் மீனா, டீன் சாந்தி ராமகிருஷ்ணன்,துறை தலைவர்கள் ராதிகா,கற்பகவல்லி உட்பட பலர் கலந்து கொண்டனர். சந்திரகாந்தி பிறந்தநாள் நூற்றாண்டு நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆடை வடிவமைப்பு துறையை சேர்ந்த மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு அணிவிக்கப்பட்டு ஆடை அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழந்தைகள் மேடையில் ஒய்யார நடை நடந்து அசத்தினர். கிட்ஸ் ஷோ மற்றும் தீமேட்டிக் ஷோ இரண்டு அமர்வாக நடைபெற்ற இதில் நடுவர்களாக்ஆடை வடிவமைப்பாளர் கரூர் யுதிகா டிசைனர் ஸ்டுடியோ நிறுவனர் சரண்யா சண்முக சுந்தரம், ஆடை வடிவமைப்பாளர் ஜாரா கிளாம்ஸ் நிறுவனர் ஜாரா, சர்வதேச ஒப்பனை நிபுணர் பூங்கொடி,திரைப்படத்துறை மற்றும் ஊடக ஆடை வடிவமைப்பாளர் வசந்த்,பேஷன் டிசைனர் அருண் பாலகிருஷ்ணா,ஒப்பனை கலைஞரும் நடிகருமான கோவை அபி சையத், ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த ஆடை வடிமைப்பாளர்களை தேர்வு செய்தனர்.
தொடர்ந்து ஆடை வடிவமைப்பு மற்றும் அலங்கார அணிவகுப்பில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மாலினி சுரேஷ், மித்ரா வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments