சாரதா ஸ்கில் அகாடமியின் தலைமை இயக்குனரான ஜி. கண்ணப்பன் அவர்கள் கோவை அவிநாசி சாலை உள்ள செய்தியாளர்களை சந்தித்தார்!!

கோவை கே.ஜி. குழுமத்தின் ஸ்ரீ பழனி முருகன் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் சாரதா ஸ்கில் அகாடமியின் முதலாவது பட்டமளிப்பு விழா நாளை சனிக்கிழமை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள பாரதியார் அரங்கில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில், சாரதா ஸ்கில் அகாடமி மையத்தில் கற்றுத்தரப்படும் இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ், பி.எல்.சி. புரோகிராமிங், கிளவுட் கம்ப்யூட்டிங், சிஸ்டம் நெட்வொர்க்கிங், எலக்ட்ரிக் வாகன தொழில்நுட்பங்கள், ஆட்டோமோட்டிவ் சர்வீஸ் டெக்னீஷியன்  CAD டிசைனிங் போன்ற தொழில் திறன் பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற 500க்கும் அதிகமான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓


https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் அவர்கள் கூறியும்போது:

கிராமப்புற பகுதிகளில் பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்படும் இளைஞர்களுக்கும், மேற்படிப்பு படிக்க இயலாமல் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்களுக்கும் சாரதா ஸ்கில் அகாடமி சார்பில் திறன் சார்ந்த கல்வியை பயிற்றுவித்து அதன் மூலம் வேலை வாய்ப்பு பெற மற்றும் சொந்த தொழில்கள் துவங்க வழிவகை செய்யப்படுகின்றது. சாரதா ஸ்கில் அகாடமியின் 90% பயிற்சி பயிற்று தொகை, ஸ்ரீ பழனி முருகன் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது.

கடந்த ஜனவரி 13ஆம் தேதி சென்னையில் தமிழ் நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் நகை டிசைன் துறையில் மாவட்ட அளவில் சாரதா ஸ்கில் அகாடமியில் பயின்ற CAD டிசைன் துறை மாணவன் தேர்ந்தெடுக்கப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மேம்பாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் விருது வழங்கப்பட்டது.

கிராமப்புற மேம்பாட்டின் கீழ், கிராமப்புறங்களில் மற்றும் பழங்குடி பகுதிகளை சேந்த மகளிர்களுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் எம்பிராய்டரி, வீட்டிலேயே தயாரிக்க கூடிய ரசாயனங்கள், காளான் வளர்ப்பு மற்றும் பலவற்றை பற்றி சொல்லிக்கொடுத்து, அவற்றை சொந்தமாக தயாரித்து சுயதொழில் மூலம் விற்று அவர்களுடைய நிதி ஆதாரத்தை உயர்த்த வழிவகை செய்யப்படுகிறது என்றார்.

-சீனி, போத்தனூர்.

Comments