குத்தகைக்கு விடப்பட்ட நகராட்சி கழிப்பிடத்தின் அவல நிலை!! கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார்!!!
கோவை மாவட்டம் வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகே நகராட்சி சார்பில் ஒரு கட்டண கழிப்பிடம் உள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத்தினர் குத்தகைக்கு விட்டுள்ளனர். இந்த கட்டணக்கழிப்பிடத்தை வால்பாறை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாகம் மற்றும் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள், வளையல் கடை வீதி பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள், பழைய பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆகி வரும் பயன்படுத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் இதை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் கட்டணக் கொள்கையில் ஈடுபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். வால்பாறை நகராட்சி நிர்வாகத்தினர் நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிகமாக வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. சிறுநீர் கழிக்க சென்றாலும் பத்து ரூபாய் கட்டணம் என கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக கழிப்பிடத்திற்கு வரும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுபோன்று கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் குத்தகையாளர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், வாகன ஓட்டுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கூட கட்டணம் வாங்காமல் அனுமதிக்கலாம் என்றும் கூறுகின்றனர். எனவே கட்டண கழிப்பிடத்திற்கு வருவோரிடம் கட்டண கொள்ளை அடிக்கும் இவர்களைப் போன்றோருக்கு குத்தகைக்கு விடாமல் முறையாக கட்டணம் வசூலிக்கும் நபரிடம் குத்தகைக்கு விடலாம் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்
மற்றும்
-பரமசிவம்.
Comments