கோவையை சேர்ந்த 8 மாணவர்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ மெயின்ஸ் தேர்வின் முதல் அமர்வில் 97 சதவிகிதம் மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்…
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மாணவர்களை வாழ்த்தி பேசிய ஆகாஷ் பைஜூஸ் மண்டல இயக்குநர் தீரஜ் மிஸ்ரா, மாணவர்களின் சிறப்பான செயல்பாடானது, ஆகாஷ் பைஜூவின் விரிவான பயிற்சி மற்றும் புதுமையான கற்றல் தீர்வுகளுடன் மாணவர்களை மேம்படுத்துவதில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக கூறினார்..இந்த அமர்வில்,ஸ்ரீராம் மஹாலக்ஷ்மி ஆனந்த் இயற்பியலில் 100க்கு 100 சதவிகிதத்துடன் 99.96 சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளார். ஹரிச்சரண் 99.65 சதவிகிதமும், அபிமன்யு சௌத்ரி 99.26 சதவிகிதமும், சஞ்சய் கண்ணா 99.14 சதவிகிதமும், மதுஷ்யாம் 98.77 சதவிகிதமும், சபரி கிருஷ்ணா 98.34 சதவிகிதமும், நிஷா சைபுல்லா 98.15 சதவிகிதம் மற்றும் எஸ்.அபிஷேக் 97.85 சதவிகித மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பைஜுஸ் நிறுவனம் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், துணை இயக்குனர் குடே சஞ்சய் காந்தி,உதவி இயக்குனர் ஸ்ரீனிவாசா ரெட்டி, RSGH தமிழ்நாடு பிரதீப் உன்னிகிருஷ்ணா,கிளை மேலாளர் செந்தில் குமார் உட்பட மாணவ,மாணவிகள் ,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments