சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த சிறுமி மற்றும் 22 பேர்!!


கோவையில் அரை மணி நேரத்தில் 1320 முறை கர்லா கட்டை சுழற்றி 22 பேர் மற்றும் யோகாவில் சிறுமி சஞ்சனா ஆகியோர் சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் 22 பேர் கர்லா கட்டை சுழற்றும் உலக சாதனை நிகழ்வு மற்றும் ஏழு வயதான சிறுமி சஞ்சனா 108 ஆசனங்களின் பெயர்களை கூறியவாறு யோகா செய்வது என இரு வேறு உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.. 

ஈச்சனாரி ரத்தினம் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற இதற்கான துவக்க நிகழ்ச்சியில்,தமிழக பா.ஜ.க.விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் மற்றும் தொழிலதிபர்கள் சபரி ஆனந்த்,சக்திவேல்,விவேகானந்தன்,ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் முன்னதாக சிறுமி சஞ்சனா 108 ஆசனங்களை பெயர்களை கூறியவாறு 108 யோகாசனங்களை செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து, இருபது வயது இளைஞர்கள் துவங்கி நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என 22 பேர் அரை மணி நேரத்தில் 1320 முறை கர்லா கட்டையை சுழற்றி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர். 

கோவை இரத்தினம் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற இதில்,கர்லா கட்டையை சுழற்றிய பயிற்சியாளர்களை கூடியிருந்த அவர்களது மாணவ,மாணவிகள் மற்றும் பெற்றோர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இது குறித்து சாதனையாளரும்,சோழன் உலக சாதனை புத்தகத்தின் மாவட்ட தலைவரும் ஆன பால முரளி கிருஷ்ணன் கூறுகையில்,உடலை கட்டுகோப்பாக வைக்க உதவும் உடற்பயிற்சியான கர்லா கட்டை சுழற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த சாதனையை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.தொடர்ந்து சாதனையாளர்களுக்கு சான்றிதழ்களை சோழன் உலக சாதனை புத்தகத்தின் மாவட்ட செயலாளர் திலகவதி வழங்கி கவுரவித்தார்.

-சீனி, போத்தனூர்.

Comments