முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி புகைப்படத்துடன் தீவிரவாதி என்று போஸ்டர்கள் கோவையில் பரபரப்பு...

 

கோவை குனியமுத்தூர்  சுகுணாபுரம் பகுதியில் முன்னாள் அமைச்சரும் தற்போதைய தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.வேலுமணியின் இல்லம் அருகே மூன்று இடங்களில் அவரின் புகைப்படத்துடன் தீவிரவாதி என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.


அதன் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் அதனை பார்த்த அதிமுகவினர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போஸ்டர்  ஒட்டிய நபரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து அதிமுகவினர் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments