கோவை கல்லூரி மாணவிகளின் பொங்கல் விழா!!

 

ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் விழா கொண்டாட்டம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள (தனியார்) ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இதில் 

பாரம்பரிய கலைகளில்  மாணவர்கள் கிராமிய போட்டிகள் பேச்சு போட்டிகள் கும்மி ஆடி மாணவர்கள் பொங்கல் விழாவை சிறப்பித்தனர்.

மேலும் பாரம்பரிய கலைகளான கோலம் போடுதல், கைவினைப்பொருட்கள் செய்தல்,பறையடித்தல் ,சிலம்பாட்டம்,மெதுவாக சைக்கிள் ஓட்டுதல்,பம்பரம் விடுதல்,பல்லாங்குழி ஆட்டம் ,நூறாங்குச்சி ,ஐந்துகால் ஆட்டம் ,அம்மியில் பொங்கல் வைத்தல் ,

உலக்கையில் அரிசி குத்தல்,மருதாணி வைத்தல் ,பூ கட்டுதல் , நாட்டுப்புற பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

சிறப்பாக  பொங்கல் வைத்த மாணவிகள் பொங்கல் பரிசை தட்டி சென்றனர். சினிமா பாடலுக்கு ஏற்றவாறு மாணவ மாணவிகள் நடனம் ஆட பொங்கல் விழா கலைகட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.


Comments