ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தேப் பட்டைத்தர தேர்வு!!!

தூத்துக்குடி மாவட்டம் ,ஓட்டப்பிடாரம் டிஎம்பி மெக்கவாய் ஆரம்பப்பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தேப் பட்டைத்தர தேர்வை SKIF -INDIA- தூத்துக்குடி மற்றும் கிங்ஸ் இண்டர்நேஷனல் மார்ஷியல் ஆர்ட்ஸ்  அகாடமியின் சார்பாக நடைப்பெற்றது.

இத்தேர்வின் தலைமைத்தேர்வாளராக SKIF -INDIA  தேசிய பொதுச்செயலாளர் கராத்தே R.ஸ்டீபன்  அவர்களும் , தேர்வாளராக SKIF -INDIA -தமிழ்நாடு இணைசெயலாளர் P.T.சுரேஷ் அவர்களும் , கூடுதல் தேர்வாளராக SKIF. INDIA -திருநெல்வேலியின் துணைத்தலைவர் G.பிரபு அவர்களும் வந்து தேர்வு நடத்தினர். பட்டைத்தர தேர்வுக்கட்டுப்பாட்டாளராக  SKIF .INDIA -தூத்துக்குடி மாவட்ட செயலாளர் L.சூர்யா இத்தேர்வினை நடத்தினார். 

தேர்வில் தேர்ச்சிப்பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பட்டையம் வழங்கும் விழாவில் தலைமை விருந்தினராக டிஎம்பி மெக்கவாய் ஆரம்ப மற்றும் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி மற்றும் தாளாளர் உயர்திரு K.ஜேம்ஸ் பாஸ்கர் அவர்களும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி நல்லாசிரியர்  G.வனஜா மங்கள செல்வி அவர்களும்,  வட்டாரக் கல்வி அலுவலர் -1திருமதி V.சரஸ்வதி அவர்களும்,ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்றத்தலைவரும், ஓட்டப்பிடாரம் தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளருமான  திரு அ.இளையராஜா அவர்களும் தலைமை வகித்தனர். 

சிறப்பு விருந்தினராக நல்லாசிரியர் திரு.R. ரெங்க இராமனுஜம் அவர்களும் டிஎம்பி மெக்கவாய் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் திருS. கமலக்கண்ணன் அவர்களும் பங்கேற்றனர். தேர்வாளர்கள் தேர்ச்சிப்பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பட்டயம் வழங்க ,சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் வழங்க,பள்ளியின் இருபால் ஆசிரியப்பெருமக்கள் பதக்கம் அணிவித்து வீரர் வீராங்கனைகளுக்கு பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

தூத்துக்குடி மாவட்ட தலைமை நிருபர், 

-முனியசாமி.

Comments