கோவில் பூசாரிகளுக்கு விசுவ இந்து பரிஷத் சார்பில் வெள்ள நிவாரணம் வழங்குதல்!!!
தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் கிராம கோவில் பூசாரிகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு சார்பில் வழங்கப்பட்டது. இன்று மதியம் ஒட்டப்பிடாரம் ஸ்ரீ உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோவில் வைத்து பூசாரிகளுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் சவலாப்பேரி கிராமத்தில் உள்ள பூசாரிகள் மற்றும் திருவைகுண்டம் இந்து வித்யா பள்ளி வைத்து மாலை வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு திருநெல்வேலி கொக்கிரகுளம் முத்தாரம்மன் கோவில் வழங்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட அமைப்பாளர் சரவணன் பூசாரி நெல்லை மாவட்ட அமைப்பாளர் கொட்டாரம் கணேசன் அர்ச்சகர், மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் வித்யாலயா பள்ளி மேற்பார்வையாளர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.
Comments