எழுச்சியுடன் நடைபெற்ற பொள்ளாச்சி நகர மஜக ஆலோசனை கூட்டம்..!!

மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்டம், பொள்ளாச்சி நகர ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் சம்சுதீன் தலைமையில் நேற்று இரவு  (31.12.2023) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் அவர்கள் பங்கேற்று கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நிர்வாக உள் கட்டமைப்புகளை வலிமைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார். 

மாவட்ட துணைச்செயலாளர் ஹனீப் நிர்வாக ஒழுங்குமுறை குறித்து விரிவாக நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் நகரத்தில் அதிகமான புதிய கிளைகளை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. 

இதில் மாவட்டத் துணைச் செயலாளர் அன்வர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஹக்கீம்மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சையது இப்ராஹிம், பெரோஸ் கான், நகரப் பொருளாளர் முகமது பாஷித், நகரத் துணைச் செயலாளர் அலாவுதீன், அப்பாஸ், இளைஞர் அணி செயலாளர் முகமது இஸ்மாயில், இளைஞர் அணி துணைச் செயலாளர் 

அப்துல் வஹ்ஹாப், இளைஞர் அணி பொருளாளர் சையது சாஹில், நகர தொழிற்சங்க செயலாளர் சவுக்கத் அலி, வணிகர் சங்க துணைச் செயலாளர் தாரிக், மருத்துவ அணி செயலாளர் இப்ராஹிம், மற்றும் நிஜாஸ், கோபால், ஷாஜகான், ஜியாவுதீன், உள்ளிட்ட நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீப், கோவை.

Comments