86 வயதில் முதல் புத்தகம் எழுதி வெளியிட்ட கோவை பெண்மணி!
கோவையைச் சேர்ந்த பாலம் சுந்தரேசன் எனும் பெண் தனது 86 வயதில் Two Loves and Other Stories (இரண்டு காதலும் பிற கதைகளும்) என்ற தலைப்பில் தனது முதல் புத்தகத்தை இன்று (3.1.24) வெளியிட்டார். இந்த புத்தகத்தை 'கல்வி துணை' எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் வி.சிவசுவாமி வெளியிட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த புத்தகத்தில் பாலம் சுந்தரேசன் ஆங்கிலத்தில் எழுதிய 40க்கும் மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன.
தன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வாழ்க்கைச் சம்பவங்களை கதைகளாக எழுதுவதை வழக்கமாக கொண்ட இவர், தனது சிறு வயதிலிருந்தே பத்திரிகைகளில் கதைகள் எழுதியிருக்கிறார். கதம்பம் என்ற வலைப்பதிவிலும் தொடர்ந்து எழுதி கொண்டுள்ளார். இப்போது அவரின் கதைகள் புத்தக வடிவம் பெற்று வெளிவந்துள்ளது.
இந்த புத்தகத்தில் உள்ள கதைகள் நம் அன்றாட வாழ்க்கையில் காணும் மக்களின் வாழ்க்கையை நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கும் அவ்வகையில் உலக புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் பாணியைப் போலவே இருக்கும். .
கருட பிரகாஷன் என்ற வட இந்தியாவைச் சேர்ந்த பதிப்பகத்தால் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.
புத்தகங்களை இப்போது www.garudabooks.com வழியாக வாங்கலாம். புத்தகங்கள் விரைவில் கடைகளில் கிடைக்கும்.
-சீனி, போத்தனூர்.
Comments