சர்வதேச தரத்தில் அழகுக்கலை நிபுணர் பயிற்சி வழங்கும்`லாக்மே அகாடமி' கோவை காந்திபுரத்தில் தொடக்கம்!! திறப்பு விழாவையொட்டி 50 சதவீதம் கட்டணச் சலுகை!


சர்வதேச தரத்திலான அழகுக்கலை நிபுணர் பயிற்சியை வழங்கும் லாக்மே அகாடமி கோயம்புத்தூரில் புதிய கிளையைத் திறந்துள்ளது. தென்னிந்தியாவில் முதல்முறையாக அதிநவீன உபகரணங்களுடன் அமைந்துள்ள இந்தப் பயிற்சி மையத்தில், திறப்பு விழா அறிமுகச் சலுகையாக பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

உடல்நலன் மற்றும் பராமரிப்பில் அனைவரும் மிகுந்த கவனம் செலுத்தும் தற்போதைய சூழ்நிலையில், அழகுக்கலை நிபுணர்கள் மற்றும் உடல்நலன் பராமரிப்பாளர்களின் தேவைகள் அதிகரித்துள்ளன. அதிக சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்புகள் மட்டுமின்றி, தொழில்முனைவோராக உருவாகவும் அழகுக்கலை நிபுணர்களுக்கு வாய்ப்புகள் காத்திருக்கின்றன. 

அழகுக்கலை நிபுணராக வேண்டுமென விரும்புவோரின் கனவுகளை நனவாக்கும் லாக்மே அகாடாமி, உலக தரத்திலான அழகுக்கலை பயிற்சியை வழங்குவதில் முதலிடம் வகிக்கிறது.  அழகுக்கலை, உடல்நலன்  பராமரிப்பு உள்ளிட்டவற்றில் தலைசிறந்த நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கும் லாக்மே அகாடமி, இங்கு பயிற்சி பெறுவோரை சிறந்த அழகுக்கலை நிபுணர்களாக்குவதுடன், தொழில்முறை வல்லுநர்களாகவும்  உருவாக்குகிறது.

குறிப்பாக, உலகம் முழுவதும் அதிநவீனக் கல்வி மற்றும் பயிற்சியை வழங்கும் அப்டெக் நிறுவனத்துடன் இணைந்து, அழகுக்கலையில் தலைசிறந்த பயிற்சியாளர்களுடன் செயல்படும் லாக்மே அகாடாமியில் பயிற்சி பெறுவோர், நவீன அழகுக்கலை மையங்கள், ஃபேஷன் போட்டோ-ஷூட் நிறுவனங்களில் மட்டுமின்றி, மணப்பெண் மற்றும் மணமகன் அலங்காரம், சினிமா, சின்னத்திரை மற்றும் சமூகவலைதளப் பிரபலங்களுக்கான தனித்துவ அலங்காரம் (செலிபிரிட்டி ஸ்டைலிஷ்ட் - மேக்அப் ஆர்டிஸ்ட்) மூலம் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற முடியும். 

சருமம், முடி, நகங்கள், பாதங்கள் பராமரிப்பு மற்றும் ஒப்பனைக் கலை, அழகுசாதனப் பொருட்களைக் கையாளுதல் உள்ளிட்டவை குறித்து அடிப்படையிலிருந்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அழகுக்கலை, உடல்நலன் பராமரிப்பு மற்றும் ஒப்பனையில் உலக அளவிலான தரச் சான்றிதழ்களை வழங்கும் பி &  டபிள்யுஎஸ்எஸ்எஸ்சி மற்றும் சிடெஸ்கோ அமைப்பின் அங்கீகாரத்தை லாக்மே அகாடமி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய அளவில் எங்கும் இல்லாத அளவுக்கு, அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கோவை காந்திபுரத்தில் தொடங்கப்பட்டுள்ள லாக்மே அகாடாமி பயிற்சி மையத்தில் அழகு சாதனங்களைக் கையாளுதல், சிறப்பு சருமப் பராமரிப்பு, முடி அலங்காரம் மற்றும் பராமரிப்பு, ஒப்பனைக் கலை, நகங்கள் சீரமைப்பு மற்றும் அழகுபடுத்தல், உடல்நலன் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் சர்வதேச தரத்திலான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

லாக்மே அகாடமி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நட்சத்திரம் சைத்ரா ரெட்டி பங்கேற்றார். யான் அறக்கட்டளை பிரதீப்குமார், தொழிலதிபர் கே.வி.அரங்கசாமி, லாக்மே அகாடமி நிர்வாகி விஜயசூரியன், லஷ்மி மற்றும் சின்னத்திரை, சமூகவலைதளப் பிரபலங்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

வெளியூர்களில் இருந்து வந்து பயில்வோருக்கு வசதியாக கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள லாக்மே அகாடமியில் திறப்பு விழா அறிமுகச் சலுகையாக பயிற்சிக் கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவது, பயிற்சியாளர்களுக்கு பொன்னான வாய்ப்பாகும். அதுமட்டுமின்றி, பயிற்சி மற்றும் தொழில் தொடங்க வங்கிக் கடனுதவி பெறவும் லாக்மே அகாடமி உதவுவது குறிப்பிடத்தக்கது.

-சீனி, போத்தனூர்.

Comments