சிக்னேச்சர் ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் ஷோரூமில் புதிய ஜாவா 350 சி.சி. பைக் அறிமுகம்!!
கோவை அண்ணா சிலை எதிரே உள்ள சிக்னேச்சர் ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் ஷோரூமில், புதிய ஜாவா 350 சி.சி. பைக்கை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபீக் அறிமுகம் செய்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஜாவா பைக் பிரியர்களின் நீண்ட கால எதிர்பார்பை நிறைவேற்றும் விதமாக ராயல் என்ஃபீல்டு 350 சி.சி மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக ஜாவா மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய 350 சி.சி பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே பல்வேறு தரப்பினரிடையே வரவேற்பை பெற்றுள்ள ஜாவா ஸ்டாண்டர்ட் பைக்கை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய ஜாவா 350 பைக்கின் அறிமுகம் மற்றும் விற்பனை துவக்க விழா கோவை அவினாசி சாலை,அண்ணா சிலை எதிரில் உள்ள சிக்னேச்சர் ஜாவா மோட்டார்ஸ் ஷோரூமில் நடைபெற்றது.
நிறுவனத்தின் தலைவர் யூசுப் ஷரீப், நிர்வாக இயக்குனர் இப்ராகீம் ஷெரீப்,ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக,தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜெ.முகம்மது ரபீக் கலந்து கொண்டு புதிய பைக்குகளை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில்,ஏ.எஸ்..எம..அருண்குமார்,விண்டேஜ் மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் அபிராமி,ஜாவா யெஷ்டிகோவை ரைடிங் கிளப் தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..மூன்று அசத்தலான வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ள ஜாவா 350 சி.சி.பைக்கின் விற்பனைக்கான முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றது.
-சீனி, போத்தனூர்.
Comments