ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்!!
13-வது ஜூனியர் ஆண்கள் உலகக்கோப்பை ஆக்கி தொடர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
பின்னர் எழுச்சி பெற்ற இந்திய அணி பிற்பாதி ஆட்ட நேரத்தில் இந்திய அணி 4 கோல்கள் அடித்து அசத்தியது. அதே சமயத்தில் பிப்ரவரி ஆட்ட நேரத்தில் நெதர்லாந்து அணி 1 கோல் மட்டுமே அடித்தது.
இதன் மூலம் முழு நேர ஆட்ட முடிவில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா-ஜெர்மனி, பிரான்ஸ்-ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments