கோவை காளப்பட்டி பகுதியில் சுகிணா பிப் பள்ளியில் ஆண்டு விழா!! மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன!!
கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சிகுணா பிப் பள்ளியின் ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் உள்ள ராமசாமி அரங்கில் நடைபெற்றது. சுகுணா குழுமங்களின் தலைவர் லஷ்மி நாராயண சாமி மற்றும் தாளாளர் சுகுணா லஷ்மி நாராயணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர்.
பள்ளியின் முதல்வர் மார்ட்டின் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து அவர், பள்ளியில் மாணவ மாணவிகளின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி, விளையாட்டு, அறிவியல் என அனைத்து திறன்களையும் ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ஆம்பியர் எலக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் நிறுவனர் ஹேமா அண்ணாமலை கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே உரையாற்றினார். தொடர்ந்து விளையாட்டு, கல்வி உள்ளிட்ட துறைகளில் சிறந்து செயல் பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் இந்தியாவின் பன்முக தன்மையை எடுத்து கூறும் விதமாக மாணவ மாணவிகளின் நடன மற்றும் நாடக நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. நிகழ்ச்சியில் ஆசிரிய ஆசிரியைகள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.
Comments