கோவை மலுமிச்சம்பட்டி தி சம்ஹிதா அகாடமி பள்ளியில் வசு தெய்வ குடும்பம் எனும் தலைப்பில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவ,மாணவியர்களின் பெற்றோர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

 

கோவை மலுமிச்சம்பட்டி தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சி, 'வசு தெய்வ குடும்பம்' என்ற தலைப்பில் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.. பள்ளியின் முதல்வர் .புஷ்பஜா கண்ணதாசன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில், சம்ஹிதா அறக்கட்டளையின் அறங்காவலரும், இயக்குநருமான .ஆஷா தாமஸ் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டார்.

இந்திய ஒற்றுமையை எடுத்து கூறும் விதமாக உலகில் உள்ள அனைவரும் ஒரே குடும்பம் என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,இந்தியாவின் பன்முக தன்மையை எடுத்து கூறும் விதமாக மாணவ,மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.குறிப்பாக திமழ்நாடு,கேரளா,பஞ்சாப்,ஆந்திரா ,கர்நாடகா,மகாராஷ்டிரா என  இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சார சிறப்புகளை எடுத்து கூறும் விதமாக நடைபெற்ற மாணவ,மாணவிகளின் நடனங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,


மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முன்னதாக தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் செயல்பாடு குறித்து பேசிய பள்ளியின் முதல்வர் புஷ்பஜா கண்ணதாசன்,எங்களது பள்ளியில் மாணவ,மாணவிகளின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் கல்வி,விளையாட்டு,அறிவியல் என அனைத்து திறன்களையும் ஊக்குவித்து வருவதாக தெரிவித்தார்..நிகழ்ச்சியில் ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள்,பெற்றோர்கள்,ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

-சீனி, போத்தனூர்.

Comments