வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் தெருவிளக்கு அமைத்துத் தர C I T U கோரிக்கை!!
கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் தெரு விளக்குகள் இல்லாமல் எஸ்டேட் தொழிலாளர்களும் பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சி ஐ டி யு சங்கத்தின் பொதுச்செயலாளர் வால்பாறை பி பரமசிவம் தமிழக நகராட்சி துறை அமைச்சர் அவர்களுக்கும் தமிழக நகராட்சி துறை செயலாளர் அவர்களுக்கும் இதுகுறித்து கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். மனுவில் வால்பாறை உள்ள அனைத்து எஸ்டேடுகளிலும் தெரு விளக்குகள் அதிக அளவில் அமைக்க வேண்டும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு அருகில் புதர்கள் அதிக அளவில் உள்ளது அதே போல் குடியிருப்பு அருகில் ஒன்று தேயிலைத் தோட்டம் இருக்கும் அல்லது வனப்பகுதியாக இருக்கும். இக்காரணத்தால் வனவிலங்கு எளிதில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் வர வாய்ப்புள்ளது இதனால் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகள் வனவிலங்கு தாக்குதல் ஏற்படுகிறது
இதை கருத்தில் கொண்டு எஸ்டேட் பகுதிகளில் அதிக தெரு விளக்குகளை அமைத்து தர வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குறிப்பாக வால்பாறை அருகே உள்ள சிறுகுன்ற எஸ்டேட்டில் உள்ளது போல் ஒரு லைனுக்கு ஒரு தெருவிளக்கு அமைத்து தொழிலாளர்களை பாதுகாப்பது போல் அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் அமைக்க வேண்டும் அதிலும் குறிப்பாக சோலையார் எஸ்டேட் பஜார் பகுதிக்கு மேல் பள்ளிவாசல் அருகில் இரண்டாவது டிவிஷனில் கருமலை அக்கா மலை முருகன் எஸ்டேட் சேக்கல் முடி இன்னும் பல எஸ்டேட் பகுதிகளில் மிகவும் குறைந்த அளவே தெருவிளக்கு உள்ளது. அப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவது மிகவும் சிரமமாக உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு வால்பாறை பகுதியில் உள்ள எஸ்டேட்களுக்கு அதிக தெரு விளக்குகளை அமைக்க வேண்டும் வால்பாறை மலைப்பகுதியாகும் நகரப் பகுதியை விட மலைப்பகுதிகளுக்கு அதிக தெரு விளக்குகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.
Comments