ஓட்டப்பிடாரம் அருகே ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் பெண் புள்ளிமான்.!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆரைக்குளம் மலை, கீழமுடிமான், வெள்ளாரம் மற்றும் அதனை சுற்றி உள்ள காடுகளில் நூற்றுக்கு மேற்பட்ட புள்ளிமான்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மான்கள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் வருகின்றனர். இதனால் குடியிருப்பு பகுதியில் உள்ள நாய்கள் மானை கடித்துக் கொன்று விடுகின்றனர். நேற்று காலை ஜெகவீரபாண்டியபுரம் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை சாலை ஓரத்தில் ரத்த காயங்களுடன் பெண் புள்ளி மான் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஓட்டப்பிடாரம் வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் வனவர் மகேஷ், வனக்காப்பாளர் பேச்சுமுத்து, வனக்காவலர் லட்சுமணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்த மானை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பகுதிகளில் நாய்கள் நடமாட்டம் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து இறந்த மானை ஓட்டப்பிடாரம் கால்நடை மருத்துவர் டாக்டர் ஜமுனா பிரேத பரிசோதனை செய்தார். இதனைத் தொடர்ந்து மானை ஓட்டப்பிடாரம் சாலிகுளம் வன குடியிருப்பு பகுதிகளில் அடக்கம் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.
Comments